சென்னை: திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு தலைவராக எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:திமுக சட்டதிட்ட விதிகளின்படி, திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு தலைவராக எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி தலைமை கழகத்தில் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், ‘‘திமுக பொறியாளர் அணி துணைச் செயலாளர்களாக ஏ.ஜி.கதிரவன் (சென்னை), இரா.வெங்கடேசன் (சென்னை) ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.