சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி வருடம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 225வது நிகழ்வு பெரம்பூரில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, அப்பகுதி மக்களுக்கு காலை உணவு வழங்கினர். பின்னர், அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில்,‘ எதை கண்டும் திமுக பயப்படுகிற கட்சியல்ல. நாங்கள் எமர்ஜென்சிக்கே பயப்படாதவர்கள். திமுக பயப்படுகிறது எனக் கூறி பயமுறுத்தும் அளவுக்கு எந்த கட்சிக்கும் தகுதியில்லை. அது யாராலும் முடியாது. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததை பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியாற்றிவர்கள். அதன் அடிப்படையில் திமுக பலமான கட்சி. கரூர் விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது ,’என்றார்.
+
Advertisement