Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுகவுடன் உறுதியாக நின்று பயணிக்கிறோம் எனக்கு ஆசை காட்டினால் சென்றுவிடுபவன் நான் அல்ல: பாஜவுக்கு திருமாவளவன் பதிலடி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை முத்துக்கடையில் விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணியின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று முனதினம் இரவு நடந்தது. சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திருமாவளவன் எம்பி பேசியதாவது: ஆளும் பாஜ, அரசாங்கத்திற்கே மதம் வேண்டும் என செயல்படுகிறது.

மதம் மக்களுக்கானது. அரசாங்கத்திற்கு ஆனது இல்லை என அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் உள்ளது. மதத்தின் மீது பற்றுள்ள மகாத்மா காந்தியே அம்பேத்கரின் கருத்தை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் ஆச்சரியம். ராகுல்காந்தி அந்த கருத்தில் உறுதியாக இருக்கிறார். காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியோடு இருக்கிறோம். சனாதனத்தை பற்றி திருமாவளவன் பேசியபோது பிரச்னை ஆகவில்லை. அதே கருத்தை உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்னை ஆக்குகின்றனர்.

எங்கள் கருத்து இந்து சமூகத்திற்கு எதிரானது இல்லை. கருத்தியலுக்கு எதிரானதுதான். திமுவில் இருந்து நீ ஏன் வெளியே வரவில்லை என்கின்றனர். இது என்னை ஆத்திரமூட்டுவதற்காக கூறும் கருத்து. 10 கட்சிகள் சேர்ந்து உருவாக்கியதுதான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. ஆர்எஸ்எஸ்ஐ எதிர்க்க கொள்கை உள்ள நாங்கள் உடன் இருக்கிறோம். தேசிய அளவில் இது தேவை உள்ளது. நான் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன்.

கலைஞர், ஜெயலலிதா, ராகுல் அனைவரோடும் அரசியல் செய்துள்ளேன். ஆசை காட்டினால் நான் சென்று விடுவேன் என நினைக்கின்றனர். கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விசிக. சங்பரிவார் தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விசிக. அதனால் திமுகவுடன் உறுதியாக நின்று பயணிக்கிறோம். மதச்சார்புக்கு ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

* அவர் பிரதமர்... நான் எம்பி... அவ்வளவுதான்...

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நம்முடைய ராஜேந்திர சோழனுடைய திருவாதிரை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வந்துள்ளார். அவரை வரவேற்க வேண்டியது தமிழர்களின் மரபு.

அந்த வகையில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், மண்ணின் மைந்தர், இந்த மண்ணுக்கு உரியவன் என்ற முறையிலும் பிரதமர் மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்ேலாரும் கொண்டாடக்கூடிய அளவுக்கு பெருமைக்குரியவர் ராஜேந்திர சோழன். இவ்வாறு அவர் கூறினார். பிரதமருடன் மேடையில் கலந்து கொள்ள உள்ளீர்களே என்ற கேள்விக்கு,‘‘அவர் பிரதமர், நான் எம்பி, அவ்வளவு தான்...’’ என்றார்.