Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக உடனான கூட்டணியால் அதிருப்தி.. திமுகவில் இணைகிறார் அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா!!

சென்னை :அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜாவை நீக்கி அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் வந்துள்ள நிலையில் அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதிமுவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அன்வர்ராஜா ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். அண்ணா, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்த நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து பேசியதால், விளக்கமே கேட்கப்படாமல் கடந்த 2021ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். இந்த நிலையில் அண்மையில் பா.ஜ.க.வுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தி அடைந்துள்ளார்.

இதனை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக கால் ஊன்ற முடியாது என்று அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அன்வர் ராஜா. அன்வர் ராஜாவின் இந்த பேட்டி அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தபோதும் அக்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார் அன்வர ராஜா. சிஏஏ சட்டத் திருத்தத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தபோதும் நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா எதிர்த்து பேசியிருந்தார். இந்த சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் அன்வர் ராஜா தன்னை இணைத்து கொள்கிறார்.