திருத்தணி: திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. இந்த பள்ளி மலைப் பகுதிக்கு அருகில் இருப்பதால் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வந்து மாணவர்களை அச்சுறுத்தியது. இதன்காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அச்சத்துடன் பள்ளிக்கு சென்றுவந்தனர். மேலும் விளையாட்டு மைதானத்தில் அச்சமின்றி விளையாட முடியாத நிலைமை இருந்தது.
இதனால் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி திமுக அமைப்பாளர் முரளி சேனா, தனது சொந்த செலவில் விளையாட்டு மைதானத்தை சுத்தப்படுத்தி அடர்த்தியாக வளர்ந்து இருந்த செடி, கொடிகளை அகற்றி சீரமைத்தார். இதன்காரணமாக மாணவர்கள், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முரளி சேனாவுக்கு நன்றி தெரிவித்தனர்.