Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுகவை அழிக்க நினைப்பது நடக்காது; எஸ்ஐஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள டாக்டர் கலைஞர் திடலில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை நடந்தது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2021ல் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு பக்கம் ஆட்சிப்பணி, அரசு விழாக்கள், சுற்றுப்பயணங்கள், நாள்தோறும் புதிய, புதிய திட்டங்கள் என்ற அறிவிப்பு இது ஒரு பக்கம். அதேபோல, கட்சி பணிகள் என்று எடுத்து கொண்டால், உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஞாயிறு (நேற்று) காலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை காணொலி மூலமாக நடத்தினேன். அதன் பிறகு, வாக்காளர் திருத்த பட்டியல் பணிகளை பற்றி நடைபெற இருக்கக்கூடிய எஸ்ஐஆர் (SIR) க்கு எதிரான அந்த பிரச்னை நாளைய தினம் (இன்று) நாம் நடத்த இருக்கின்ற S.I.R.க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம், இதைப்பற்றி எடுத்து சொல்வதற்காக மாவட்ட செயலாளர்களிடம்

கலந்து பேசினேன்.

எஸ்ஐஆர் என்றால் என்ன? எஸ்ஐஆர் என்பது எந்த அளவிற்கு மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை எப்படி நாம் முறையாக பயன்படுத்திட வேண்டும். அவர்கள் என்ன காரணத்திற்காக கொண்டு வந்திருக்கிறார்கள். அது குறித்து நம்முடைய பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். அதையெல்லாம் முடித்து கொண்டு மாலையில் விமானத்தில் திருச்சிக்கு வந்து, அதற்கு பிறகு இந்த திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். இதை முடித்துவிட்டு, புதுக்கோட்டைக்கும் நான் செல்ல இருக்கிறேன். இப்படி இயங்கி கொண்டிருப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் தான் இதை இயக்கம் என்று சொல்கிறோம். தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.

அதற்காகதான் நாம் இயக்கம் என்று சொல்லி கொண்டிருக்கிறோம். அப்படித்தான் நிற்க நேரம் இல்லாமல் நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நான் மட்டுமல்ல, இயக்கத்தில் இருக்கக்கூடிய முன்னோடிகள், இங்கே இருக்கின்ற செயல்வீரர்கள் இன்றைக்கு பம்பரமாக பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய காட்சிகளை எல்லாம் நான் தொடர்ந்து பார்க்கிறேன். அதற்கு என்ன காரணம்? எதிரிகளாக இருக்கக்கூடியவர்கள் புதுப்புது உத்திகளோடு நம்மை தாக்குவதற்கு, நம்மை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு புதுப்புது முயற்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறையை ஏவி விட்டார்கள், அதற்கு பிறகு சிபிஐ என்று சொல்லக்கூடிய குற்றப் புலனாய்வுத்துறையின் மூலமாக நம்மை மிரட்டி பார்த்தார்கள். இப்போது, எஸ்ஐஆர் என்று சொல்லக்கூடிய ஒரு ஆயுதத்தை எடுத்து திராவிட முன்னேற்ற கழகத்தை இதன் மூலமாக தான் அழிக்க முடியும், ஒழிக்க முடியும் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள். இது வேண்டும் என்றால், வேறு மாநிலங்களில் எடுபடலாமே தவிர, உறுதியாக சொல்கிறேன் திமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒருபோதும் அது எடுபடாது முடியாது என்று அழுத்தந்திருத்தமாக தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும். நான் திருச்சிக்கு வந்தவுடனே ஒரு செய்தி கிடைத்தது என்ன செய்தி என்றால், இந்த எஸ்ஐஆர் குறித்து நாம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். 11ம் தேதி நாளைய தினம் (இன்று) நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.நேற்று (நேற்றுமுன்தினம்) திடீரென்று அதிமுகவின் சார்பில், உச்ச நீதிமன்றத்திற்கு சென்று திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கு தொடுத்திருக்கிறது, அதில் எங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.நான் கேட்கிறேன், உங்களுக்கு உள்ளபடியே அதில் அக்கறை இருக்கிறது என்று சொன்னால், அதில் உங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால் முன்கூட்டியே வழக்கை தொடுத்திருக்க வேண்டும். ஆனால், திடீரென்று வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு என்ன காரணம்? இதனை யோசித்து பார்க்க வேண்டும்.

அந்த எஸ்ஐஆர்ஐ அவர்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பாஜவோ அல்லது தேர்தல் ஆணையமோ எதை சொன்னாலும் ஆதரிக்கின்ற நிலையில் இன்றைக்கு அடிமையாக நின்று கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் அதனை எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு நாம் தொடுத்திருக்கக்கூடிய வழக்கில் இணைத்து தங்களை கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், ஒரு கபட நாடகத்தை நடத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சி. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழி நின்று நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய இந்த ஆட்சி. இந்த ஆட்சிக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும். துணை நிற்கவேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.