சென்னை : அதிமுக கோமா நிலையில் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,"எந்த அரசியல் கட்சியாவது தேர்தலில் தோல்வி அடைவோம் என்று கூறுவார்களா?. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வதாக கூறியிருக்கிறார்.
210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார்.234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும். அதிமுக கோமா நிலையில் உள்ளது.மக்கள் விரும்புகின்ற ஆட்சி திமுக தான். திமுகவை வசைபாடிய அண்ணாமலையே மக்கள் மன்றத்தில் திமுக வலுவாக இருக்கிறது எனப் பேசியிருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3,266 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம்.இதுவரை 7986 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது." என்று கூறினார்.