சென்னை: திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்(டிஎல்சி), சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள்(சிஎல்சி) ஆலோசனைக் கூட்டம் வருகிற 26ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கூறிய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் விடுதலை முன்னிலையில் நடைபெறும். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.