சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (8ம்தேதி) காலை 10 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்ககளை மாவட்ட செயலாளர்கள் ஓரிடத்தில் அமர வைத்து கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி குறித்து விவாதிக்கப்படும்.


