தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி அவர்கள் இயற்கை எய்தியதையொட்டி சென்னை, சாலிகிராமத்திலுள்ள எல்.கே.சுதீஷ் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.