Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் இன்று ஜோகோவிச்-சின்னர் அல்காரஸ்-டெய்லர் ஃபிரிட்ஸ் பலப்பரீட்சை;மகளிர் இறுதிபோட்டியில் அமண்டா-ஸ்வியாடெக் நாளை மோதல்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதியில், 8ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-2, 6-0 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார். முதன்முறையாக அவர் விம்பிள்டன் பைனலுக்குள் நுழைந்துள்ளார். முன்னதாக நடந்த முதலாவது அரையிறுதியில், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவை வீழ்த்தினார். நாளை பைனலில் ஸ்வியாடெக்-அமண்டா மோதுகின்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில், செக் குடியரசின் கேடரினா சினியாகோவா, நெதர்லாந்தின் செம் வெர்பீக், ஜோடி 7-6, 7-6 என்ற செட் கணக்கில், பிரேசிலின் லூயிசா ஸ்டெஃபானி, இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று மாலை 6 மணிக்கு முதல் அரையிறுதியில் ஸ்பெயினின் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், இரவு 7.40 மணிக்கு 38 வயதான செர்பியாவின் ஜோகோவிச், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் மோதுகின்றனர். இருவரும் இதற்கு முன் 9 முறை மோதி உள்ளனர் .இதில் 5ல் ஜோகோவிச், 4ல் சின்னர் வென்றுள்ளனர். 7 விம்பிள்டன் சாம்பியன் உள்பட இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தொடர்ந்து 5வது முறையாக விம்பிள்டன் பைனலுக்குள் நழைவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.