நியூயார்க்: ந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளியை விடுமுறை அறிவிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆளுநர் கவின் நியூசாம் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம், பொதுப் பள்ளிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள் தீபாவளி அன்று விடுமுறை விடப்படலாம்.
மேலும், அரசு ஊழியர்கள் இந்த பண்டிகையை கொண்டாட ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த சட்டம் இரு கட்சி ஆதரவுடனும், மக்களிடையே நடந்த தொடர் முயற்சிகளாலும் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே, பென்சில்வேனியா, கனெக்டிகட் மாகாணங்களில் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் பொதுபள்ளிகளில் மட்டும் தீபாவளி விடுமுறை நாளாகும்.