சென்னை: தீபாவளியை ஒட்டி விபத்துகளை தடுக்க 108 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 'காவல்துறை, தீயணைப்புத் துறையுடன் இணைந்து ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். தீபாவளியை ஒட்டி முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிசை மற்றும் விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
+
Advertisement