சென்னை: சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி தீக்காய சிறப்பு உள் மருத்துவ பயனாளிகள் பிரிவு தொடங்கி வைத்து, தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும்போது செய்ய கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘தீபாவளியை முன்னிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் தீ விபத்திற்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து உபகரணங்கள், போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவில் 20 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.