சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 3 நாட்கள் 15,129 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10, கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. தீபாவளிக்கு 14 நாள்கள் உள்ள நிலையில் இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்
+
Advertisement