சென்னை: தீபாவளிக்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே. இதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்கியது. ரயில் புறப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் தெற்கு ரயில்வே, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தேவைப்படுகிறது. சில சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டன. பயணிகளின் தேவை அதிகரிப்பதால் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 4 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கபடும். அக்டோபர்.17, 20ல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். நாளை, நாளை மறுநாள் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்டோபர்.18, 21ம் தேதி மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.