தீபாவளி ஒட்டி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு படை கண்காணிப்பு: முன்பதிவு இல்லாத பெட்டிகளை ஆக்கிரமிக்கும் பயணிகளுக்கு அபராதம்
சென்னை: தீபாவளி ஒட்டி ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாதவர்கள் பயணிப்பதை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கியுள்ளனர். சென்னை திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகளவில் செல்வதால் ரயில் நிலையங்களில், பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.
ரயில் டிக்கெட் உறுதியாகாமல் இருந்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியரும் முன்பதிவு பெட்டிகளில் ஏறிவிடுகின்றனர். முன்பதிவு பயணியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றனர். இதனால் டிக்கெட் கிடைத்தும் நிம்மதியாக பயணம் செய்யமுடியாமல் முன்பதிவு பயணியர் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில், முன்பதிவு பயணத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புறநகரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையினரின் 50 சதவீதம் பேர் முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்களில் பணி அமைத்தப்பட்டுள்ளன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணியரை வரிசையில் அனுப்பிவைக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, பெங்களூர், எழும்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் சோதனை நடத்துவர் என்று கூறிய அதிகாரிகள் முன்பதி இல்லாத பெட்டிகளை ஆக்கிரமிக்கும் மற்ற பயணியரை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.
தெற்கு ரயில்வே 50 சிறப்பு குழுக்களை அமைக்கப்பட்டிருப்பதாக கூறிய அதிகாரிகள் ஒவ்வொரு குழுவிலும் டிக்கெட் பரிசோதாகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசாரும் இருப்பார் என்று கூறினார். இவர்கள் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, பெங்களூர், திருவந்திபுரம், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் விரைவு ரயில்களில் திடீர் என ஏறி சோதனை நடத்துவார்கள் என்று தெரிவித்த அவர்கள் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம் ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றனர்.