சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் ஆவடியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூவிருந்தவல்லியில் இருந்து திருப்பிவிடப்படும். பூவிருந்தவல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், தி.மலை, திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை அடையலாம். மதுரவாயலில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சி, தி.மலை, திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்டி. சாலை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement