எத்தனை யுகங்கள் கடந்தாலும் புடவைக்கான விருப்பமும், அதன் மீதான ஆர்வமும் மட்டும் நிச்சயம் குறையாது. குறிப்பாக இன்ஸ்டா , ஷார்ட்ஸ் டிரெண்ட் இன்னும் அதிகமாகவே புடவைகளை விரும்பி அணியப் பழகியிருக்கிறது. நிகழ்ச்சிகள், விழாக்கள் என்றால் கூட புடவையே வேண்டாம் எனச் சொல்லும் இளம் பெண்கள் கூட தற்போது டிரெண்டியாக ரெடி டூ வேர் புடவைகள், 1 நிமிடப் புடவைகள் என டிசைன் செய்து கட்டத் துவங்கியிருக்கிறார்கள். இதோ 2025ஆம் ஆண்டு என்னென்ன புடவைகள் டிரெண்டில் உள்ளன.
எளிய தோற்றம் (Simple Look)
*கைத்தறி மற்றும் நிலைத்திருக்கும் புடவைகள் (Handloom & Sustainable Sarees) - காட்டன், லினென் போன்ற கைத்தறிப் புடவைகள் கேஷுவல் வகையறாக்களாக உள்ளன.
* கனமில்லாத புடவைகள் (Light Fabrics with Subtle Embroidery) - ஜார்ஜெட், ஆர்கான்சா போன்ற கனமில்லா மென்மையான துணிகளில் சின்ன சின்ன எம்பிராய்டரி செய்த புடவைகள் இந்த வருட விற்பனையில் உள்ளன. குறிப்பாக இதில் ஆர்கான்சா புடவை ஜெமினி AI வரை டிரெண்டாகியிருக்கிறது.
*ஹாஃப்&ஹாஃப் புடவைகள் (Half-and-Half Sarees) - மேலே ஒரு நிறம், கீழே இன்னொரு நிறம்; குறைந்த விலையில் ஸ்டைலிஷ் தோற்றம் தரும் புடவைகள். இவை ஷிஃப்பான், புடவைகளில் அதிகம் விற்பனைக்கு உள்ளன.
ஸ்டைலிஷ் (Trendy Look)
*உடனடி புடவைகள் (Pre-draped Sarees) - முன்பே மடிப்புகள் செய்யப்பட்ட புடவைகள்; சில நிமிடங்களில் அணிந்துஅழகாகத் தயாராகலாம்.
**ஃபியூஷன் புடவைகள் - பெல்ட் அல்லது கேப் ஸ்டைல் (Fusion Sarees - Belt / Cape Style) - பாரம்பரிய புடவைக்கு மோடர்ன் மாற்றம்; இளைய தலைமுறைக்கு பிடிக்கும் ஸ்டைல். புடவையுடன் இணைக்கப்பட்ட பெல்ட், புடவையின் முந்தியுடன் வரும் கேப் உள்ளிட்ட வகை.
*அப்ஸ்டிராக்ட் மற்றும் அச்சுப் புடவைகள் (Abstract & Geometric Prints) - எப்போதுமான பூக்கள், மயில், மாங்கா போன்ற டிசைன்கள் இல்லாமல் அப்ஸ்டிராக்ட் அல்லது ஜியோமெட்ரிக் வடிவங்கள் கொண்ட புடவைகள் தற்போதைய டிரெண்ட். இவற்றை டிஜிட்டல் பிரின்ட் அல்லது கணினி பிரின்ட் என அழைப்பதுண்டு.
*ஒம்பிரே நிறப் புடவைகள் (Ombre & Gradient Shades) - ஒரு நிறத்திலிருந்து மற்றொரு நிறத்திற்கு மென்மையாக மாறும் புடவைகள். இவை அதிகம் பட்டுப்புடவைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
ராயல் (Grand Look)
*மெட்டாலிக் மற்றும் சீக்குவின் புடவைகள் (Metallics & Sequins Sarees) - பளபளக்கும் மெட்டாலிக் நிறங்களான தங்கம், சில்வர், காப்பர், போன்றபளபளக்கும் நிறங்களில் புடவைகள் தற்போது டிரெண்ட், புடவை முழுக்க ஜமிக்கி, கற்கள் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் பண்டிகை காலத்திற்கே ஏற்ற வகைகளாக பட்டியலில் இணைந்துள்ளன.
*பெரிய பார்டர்கள் கம்பீரமான பல்லுவும் கொண்ட புடவைகள் (Bold Borders & Dramatic Pallus) - தங்கக் கரைகள், கனமான பல்லு; பாரம்பரியமும் பிரமாண்டமும் சேர்ந்து மின்னும் பட்டுப் புடவைகள் லேட்டஸ் வகை. குறிப்பாக புடவைகளில் அரண்மனை , வரலாற்று சம்பவங்களுடன் உருவாக்கப்படும் டிசைன்களும் தற்போது ஹாட் சாய்ஸ்.
*ஸ்டேட்மென்ட் பிளவுஸ்கள் (Statement Blouses) - எளிமையான புடவை கிராண்ட் பிளவுஸ். வெறும் பிளவுஸ்களிலேயே ராயல் லுக் கொடுக்கும் ஸ்டைல். இவை மட்டுமின்றி கவுன் புடவைகள், கேப் புடவைகள், கஃப்தான் ஸ்டைல் புடவைகள், தம்பதியர் மேட்சிங் புடவைகள் மற்றும் வேஷ்டி சட்டைகள், குடும்ப காம்போ என இந்த வருடம் புது வரவுகளாகஉள்ளன.
- ஷாலினி நியூட்டன்