டெல்லி : கொண்டாட்டங்களுடன் தீபாவளி கடந்த நிலையில் பண்டிகை காலத்தில் ஆன்லைன் மூலம் மக்கள் ஏராளமான பொருட்களை அள்ளிக்குவித்திருப்பதை விற்பனை தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன. காய்கறி முதல் கார் வரை, தரைவிரிப்பு முதல் தங்கம் வரை எளிதாக நுகர்வோரை சென்று சேர வழிவகை செய்கின்றன ஆன்லைன் விற்பனை இணைய தளங்கள் நெரிசலில் சிக்காமல் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்க முடிவதால் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனையில் சாதனை படைத்துள்ளனர் இகாமர்ஸ் நிறுவனங்கள்.
ஒரு மாத கால விற்பனை திருவிழாவில் 260 கோடி வாடிக்கையாளர்கள் பங்கேற்றுள்ளதாக அறிவித்துள்ளது அமேசான் இந்தியா நிறுவனம் ரூ.30 ஆயிரம் மேல் விலையுள்ள ப்ரீமியம் செல்போன்கள் விற்பனை அமேசானில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட பேஷன் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை 95 % அதிகரித்துள்ளது. குறிப்பாக செயற்கை முறையில் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்களின் விற்பனை 390 விழுக்காடும், ப்ரீமியம் ரக ஆடைகளின் விற்பனை 150% உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் கூறி உள்ளது.
அமேசான் பிரெஷ் தலம் மூலம் உலர் பழங்கள் மற்றும் மளிகை பொருட்களுக்கான ஆர்டர்கள் 60% அதிகரித்துள்ளது. 75 அங்குல டிவிக்கள் 70% ஃகியூ LED டிவிக்களின் ஆன்லைன் விற்பனை 105% உயர்ந்துள்ளதாகவும் . ஆன்லைன் மோட்டார் சைக்கிள் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஆன்லைன் ஆர்டர்கள் வரலாறு காணாத அளவில் அதிகரித்து இருந்ததாக பிளிப்கார்ட் நிறுவனமும் கூறியுள்ளது. தீபாவளி பண்டிகையின் கடைசி கட்டத்தில் பூஜை பொருட்கள், பரிசுகள், வெள்ளி காசுகள், செல்போன்கள், மின்னணு சாதனங்கள்,
வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பெருமளவில் நுகரப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தீபாவளி பண்டிகை நாளில் இன்ஸ்டா மார்ட் மூலம் நடந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் விற்பனை 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக அதிவிரைவு ஆன்லைன் விற்பனை தலமான ஸ்விகி தெரிவித்துள்ளது. செப்டோ ஆன்லைன் விரைவு சேவை நிறுவனமும் பண்டிகை நாளில் அபார விற்பனையை கண்டுள்ளது. குறிப்பாக குர்தா விற்பனை 25% மடங்கும் இனிப்பு, பூக்கள் விற்பனை 9 மடங்கு உச்சம் அடைந்துள்ளது.