சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி 4 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்.17, 20ல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். நாளை, நாளை மறுநாள் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்டோபர்.18, 21ம் தேதி மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
+
Advertisement