Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடப்பாண்டு 4,000 மரக்கன்றுகள் நட இலக்கு

*முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள் ஆய்வு

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடப்பாண்டு 4,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சுற்றுச்சூழல் நட்பு வளிமண்டல திட்டத்தின் கீழ், சாலையோரம் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம், கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொ) மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவர் சுந்தர் பங்கேற்று, மரக்கன்று நடும்பணியை தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 4000 மரக்கன்றுகள் நடுவதாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 2வது கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்குண தர்மபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலக வளாகம் அருகே நர்சரியில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

வேப்பமரம், புளியமரம், அரசமரம், புங்கமரம், நாவல் உள்ளிட்ட நாட்டு ரக மரங்கள் வளர்க்கப் படுகிறது. இந்த மரக்கன்றுகளை முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஸ்ரீதரன், கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, சிறப்பு மாவட்ட நீதிபதி (விபத்து நிவாரண வழக்குகள்) ராஜா, முதன்மை குறுநில நீதிபதி ஞானபாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு நீதிபதி விபிசீ, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளர் சார்பு நீதிபதி தமயந்தி, கூடுதல் துணை நீதிபதி கலைவாணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கவிநிலா, முதன்மை மஜிஸ்திரேட் எண்.1 தமிழரசு, மஜிஸ்திரேட் எண்.2 சுஸ்மிதா, விரைவு தீர்ப்பு நீதிமன்ற மஜிஸ்திரேட் தீட்சிதா, கூடுதல் மகிளா நீதிபதி முல்லை ஆகியோர் உடனிருந்தனர்.