திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமத்ரா. இவரது கணவர் ரவி. இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். தலைவர், துணை தலைவர் வேதையன் (திமுக) உள்பட 10 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 7 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை திருத்துறைப்பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான கிருஷ்ண ரமேஷிடம் (கிராம ஊராட்சி) கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 7 பேர் கொடுத்த ராஜினாமா கடிதத்தில், மன்ற தலைவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். வார்டுகளில் உள்ள குறைகளை சரி செய்ய முடியவில்லை. எனவே எங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கூறியிருந்தனர். கடிதம் மேல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பட உள்ளது என்றார்.