சுசீந்திரம்: சுசீந்திரம் ஆஸ்ராமம் சோழன்திட்டை அணையில், பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்க ஒத்திகை தீயணைப்புத்துறை சார்பில் நடந்தது. மேலும், வெள்ள பாதிப்பின்போது ரப்பர் படகுகள், பரிசல் தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது வாழைத்தண்டு, பந்து, டயர், டியூப் போன்ற மிதக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு கரை சேர்வது, ஒருமுனையில் இருந்து கயிறு கட்டி மீட்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்திய குமார், உதவி அலுவலர் துரை, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், பேரூராட்சி தலைவர் அனுஷியா, கவுன்சிலர் செண்பகவல்லி, கதிரேசன், வள்ளியம்மாள், மின்வாரிய இணை பொறியாளர் பெருமாள், ரெட்கிராஸ் சுனில் குமார், வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.