Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

40% ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவருக்கு சட்டப்படிப்பு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தரமணியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் 10 சதவீதம் உடல் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி. தற்போது, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு 40 சதவீதம் ஊனம் உள்ளதால் அரசு உத்தரவின் அடிப்படையில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் கல்வியை தொடர அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு பல்கலைக்கழகத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கோகுல கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோகுல கிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி ெசய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கோகுல கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்தி வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 40 சதவீத ஊனம் இருந்தால் மட்டுமே கல்வி கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணத்திற்கு மனுதாரர் தகுதியாவார்.

ஆனால், கல்லூரியில் சேரும்போது மனுதாரர் 10 சதவீத ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் சேர்ந்தார். அதனால், அவர் கல்வி கட்டணத்தில் விலக்கு பெற முடியாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, மனுதாரர் படிப்பில் சேரும்போது 10 சதவீத ஊனத்திற்கான சான்றிதழுடன்தான் சேர்ந்தார். ஆனால், அதன்பிறகு அரசால் அவருக்கு 40 சதவீத ஊனம் உள்ளவருக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது.

எனவே, அவருக்கு கல்வி கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் 40 சதவீத ஊனம் உள்ளதற்கான சான்றிதழ் அரசிடமிருந்து பெற்றுள்ளார். எனவே, அவரை நவம்பர் 3ம் தேதி நடைபெறும் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும். அவரது விடைத்தாளை சீலிட்ட கவரில் பல்கலைக்கழகம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.