*அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
அரியலூர் : அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் அரியலூர் செல்லும் சாலையில் மண்ணுழி பிரிவு பாதை உள்ளது. அதற்கு தென் புறத்தில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. அந்த பலகையின் மீது அங்குள்ள மரக்கிளைகள் வளர்ந்து பலகையை மறைத்துள்ளது . இதனால் வெளி மாவட்டங்களிலிருந்து இந்த வழியாக வேகமாக இருசக்கர வாகனங்களில் வரும் போது விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது.
இந்த சாலையில் எப்போதும் சிமெண்ட் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்பு கல் எடுத்து செல்ல படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அறிவிப்பு பலகையை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்றிட முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.