சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.7.2025 வரை வழங்கப்பட்டது. தற்போது வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
தொழிற்பயிற்சி நிலை யங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9499055642, வாட்ஸ் அப் எண் 9499055618 தொடர்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.