புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் அரசு உயர் பதவிகளில் தனியார் துறையை சேர்ந்தவர்கள் உட்பட நிபுணர்களை நேரடியாக நியமனம் செய்யும் போது இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டதா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘2018 முதல் 3 சுழற்சிகளில் (2018, 2021, 2023) பல்வேறு அரசு துறைகளில் இதுவரை 63 நேரடி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் 43 அதிகாரிகள் பதவியில் உள்ளன. நேரடி நியமன முறை மூலம் செய்யப்படும் நியமனங்களில் இடஒதுக்கீடு பொருந்தாது’’ என்றார்.
+
Advertisement