திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் மாடியில் குழந்தைகள் நல பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்து குழந்தைகளுடன் வெளியேறினர். இதுகுறித்து டீன் சுகந்தி ராஜகுமாரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘`குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகள் பயன்படுத்திய டயப்பர் எரிக்கும் இயந்திரத்தை எலக்ட்ரீசியன்கள் எரித்து சோதனை செய்தனர்.
அதன் புகை குழாய் வழியாக மேலே செல்லாமல், திடீரென கீழே வந்தது. உடனடியாக எலக்ட்ரீசியன்கள் அந்த இயந்திரத்தை ஆப் செய்து விட்டனர். ஆனால் அந்த இடம் சிறிதுநேரத்திற்கு புகை மூட்டமாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல் பரவியுள்ளது’’ என்றார்.