திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் வருவாய், நிதி, கல்வி நிதியில் முறைகேடு; ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015-16 முதல் 2018-19ம் ஆண்டுகளின் கணக்குகளை தணிக்கை செய்தபோது ரூ.17,73,16,820க்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கு தணிக்கையில் வருவாய், முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி பாதாள சாக்கடை நிதி, தொடக்கக் கல்வி நிதி ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது. சொத்து வரியில் ரூ.18 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலம் வாங்கப்பட்ட 137 குப்பை தொட்டிகளுக்கு தலா ரூ.19,834 பதில் ரூ.37,750 விலை கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக ஆணையர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பாக 2015 -18 வரை ஆணையராக இருந்த மனோகர், முன்னாள் துணை வருவாய் அலுவலர் சாரங்கர சவரணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. நிர்வாக பொறியாளர் கணேசன், துணை பொறியாளர்கள் மாரியப்பன், சாமிநாதன், சென்னை சுசி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.