திண்டுக்கல்: தேனி கம்பத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து, திண்டுக்கல் அருகே கவிழ்ந்த விபத்தில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு தாடிக்கொம்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement


