தினகரன் நாளிதழ் வெளியிட்ட மாதிரி வினாக்களில் பல வினாக்கள் இடம் பெற்றிருந்தது: குரூப் 2, 2ஏ தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வில் தினகரன் நாளிதழ் வெளியிட்ட மாதிரி வினாக்களில் பல வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 645 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை நேற்று நடந்தது.
இந்த குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வுக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தினகரன் நாளிதழில் சுமார் அரைப்பக்க அளவில் தேர்வர்களின் நலன் கருதி மாதிரி வினாக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இம்மாதிரி வினாக்கள் தங்களது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தயாரிப்பிற்கு பெரிதும் உதவியதாகவும் பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் பாடப் பகுதிகளில் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட சுமார் 2300 மாதிரி வினாக்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வினாக்கள் வந்திருந்தன என்றும், தொடர்ந்து மாதிரி வினாக்களை பின்பற்றியவர்களுக்கு பெரிதும் ஊக்கமும் நம்பிக்கையும் தருவதாக அமைந்திருந்தது என்றும் தேர்வு எழுதிய மதுமிதா, அருண்குமார், வெற்றி வேலன், அரவிந்த் போன்ற தேர்வர்கள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக பொதுத்தமிழ் பகுதியிலே “அறியாச் சிறுவன்”, “சிறிய கடிதம்”, “நானோ டெக்னாலஜி”, “பயோ டெக்னாலஜி”, “ஸ்பேஸ் டெக்னாலஜி”, “உதகை”உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வினாக்கள் நேரடியாகவே இடம் பெற்றிருந்தன. பொது அறிவு பாடத்திலும் திறனறிதல், வரலாறு, அறிவியல், புவியியல், இந்திய அரசியலமைப்பு போன்ற பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தினகரன் நாளிதழில் வெளிவந்த மாதிரி வினாக்களை பயிற்சி செய்தவர்களுக்கு சரியாக விடை அளிப்பதற்கு பேருதவியாக இருந்தன என தேர்வர்கள் குறிப்பிட்டனர்.