*பொதுமக்கள் கோரிக்கை
கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், துருசுப்பட்டி ஊராட்சியில் ஊரின் மைய பகுதியில் அரசு ஆங்கில வழி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுது அடைந்த நிலையில் வேறு கட்டிடத்திற்கு மாற்றபட்டுள்ளது.
பழுது அடைந்த கட்டிடம் பிரதான பகுதியில் இருப்பதால் ஊரில் உள்ள சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி வருகிறார்கள்.கட்டிடம் எப்போதுவேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் இருப்பதால், பழுது அடைந்த இந்த கட்டிடதை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.