பெங்களூரு: பெங்களூரு இந்திராநகரில் வசிக்கும் 57 வயதான பெண் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கடந்த 2024 செப்டம்பர் 15ம் தேதி டிஎச்எல் கூரியர் கம்பெனி பிரதிநிதி என்ற பெயரில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், உங்கள் பெயரில் மூன்று கிரெடிட் கார்டுகள், நான்கு பாஸ்போர்ட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட எம்.டி.எம் போதை பொருட்கள் அடங்கிய ஒரு பார்சல் மும்பையின் அந்தேரியில் உள்ள ஒரு கூரியர் மையத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், சிபிஐ அதிகாரி பிரதீப்சிங் என்ற பெயரில் வீடியோகாலில் பேசிய நபர், என்னை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக தெரிவித்தார். அவர் சொன்ன படி, 187 டிரான்சாக்ஷன் மூலம் ரூ.31.83 கோடி அனுப்பினேன். நான்கு மாதங்களில் விசாரணை முடிந்தபின், டெபாசிட் செய்த பணம் திருப்பு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றனர். ஆனால் பணம் திருப்பி கொடுக்காததால், மோசடி செய்து பணம் பறித்துள்ளதை புரிந்து கொண்டதாக புகாரில் கூறி உள்ளார்.


