பாலக்காடு:கேரளா மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து பயணிகளுடன் திருச்சூர் நோக்கி தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே வந்த போது பஸ்சில் திடீரென புகை கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பயணிகள் கவனித்து டிரைவர், கண்டக்ருக்கு தகவலளித்தனர். டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை உடனடியாக இறக்கி விட்டு பார்க்கையில், பஸ்சின் டீசல் டேங்க் அடியில் தீப்பிடித்து புகை கிளம்பியது தெரிந்தது. தவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விசாரணையில் டீசல் டேங்க் குழாய் உடைந்து தீப்பற்றியது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து குன்னம்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.