போபால்: மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் வைர சுரங்கம் உள்ளது. இதன் குறிப்பிட்ட பகுதியை ராஜ்பூரில் வசிக்கும் வினிதா கோண்ட் என்ற பழங்குடியின பெண் மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடி வந்தனர். அப்போது 3 வைரங்களை வினிதா கண்டெடுத்தார். அவை 1.48 காரட் மற்றும் 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்டது. அந்த வைரங்கள் ஏலம் விடப்படும். அவை பல லட்சத்துக்கு ஏலம் போகும் என தெரிகிறது. இதுகுறித்து வைர வியாபாரி அனுபம்சிங் கூறும்போது, ‘இந்த வைரங்களில் ஒன்று உயர் தரம் உடையது. மற்றவை குறைந்த தரம் கொண்டவை’ என்றார்.
+
Advertisement