சென்னை: ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது. ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாரின் மேல்முறையீட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான டி.வி. விவாதத்தில் அவதூறு கருத்துகள் கூறியதாக தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி தோனி வழக்கு தொடர்ந்தார். தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.
+
Advertisement