மங்களூரு: தென் கனரா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டகதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு புகார்தாரர் சின்னையா சிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மண்டை ஓடு எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது விசாரணையின் போது, காட்டில் இருந்து முதலில் மண்டை ஓட்டை கொண்டு வந்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மஸ்தலாவில் மர்மமான முறையில் இறந்த கல்லூரி மாணவியான சௌஜன்யாவின் தாய்மாமன் விட்டல் கவுடா என்று எஸ்ஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, விட்டல் கவுடாவுடன் சேர்ந்து சனிக்கிழமை இரவு நேத்ராவதி ஆற்றங்கரை பகுதிக்குச் சென்று சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு நடத்தியதாகத் தெரிகிறது. அதிகாரிகளின் தகவல்ப்படி, தர்மஸ்தலா கிராமத்தில் உள்ள நேத்ராவதி குளியல்பகுதி அருகிலுள்ள பங்களாகுட் காட்டில் இருந்து விட்டல் கவுடா முதலில் மண்டை ஓட்டை எடுத்து வந்து சின்னய்யாவிடம் ஒப்படைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எஸ்ஐடி மேலும் பல திடுக்கிடும் தகவல்களை அடுத்துவரும் நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது