Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

சிறுபான்மை நலத்திட்டம் மூலம் 52,207 பயனாளிகளுக்கு ரூ.28.56 கோடி நலத்திட்ட உதவி

*ஆணைய குழு உறுப்பினர் தகவல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சிறுபான்மை ஆணைய குழு உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தலைமையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், நிவேதா முருகன் எம்எல்ஏ முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இச்சிறப்பு குழு ஆய்வுக்கூட்டத்தில், இனிகோ இருதயராஜ் தெரிவித்ததாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுபான்மையினர் வகுப்பினைச் சார்ந்த மாணவியர்களுக்கு ரூ.5,97,500 மதிப்பில் ஊக்கத்தொகை, 6,079 சிறுபான்மை பள்ளி கல்லூரி மாணவ. மாணவியர்களுக்கு ரூ.2,32,58,254 மதிப்பில் கல்வி உதவித்தொகை, 700 முஸ்லிம் மகளிர்களுக்கு ரூ.70,00,000 மதிப்பில் உதவித்தொகை, 251 கிறித்துவ மகளிர்களுக்கு ரூ.26,30,000 மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

உலாமா உறுப்பினர்கள் 81 பேருக்கு ரூ.3,94,240 மதிப்பில் மிதிவண்டிகள், உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் 106 நபர்களுக்கு புதிய அடையாள அட்டை, தேவாலய உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் 30 நபர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 14 திட்டங்கள் மூலம் 52,207 பயனாளிகளுக்கு ரூ.2856.24 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 243 பயனாளிகளுக்கும், விலையில்லா பித்தளை சலவைப்பெட்டி 63 பயனாளிகளுக்கும்.

விலையில்லா மிதிவண்டிகள் 11ம் வகுப்பு பயிலும் 15,328 மாணவ மாணவியர்களுக்கும். சிறுகுறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகள் அமைப்பதற்காக அதிகபட்சம் ரூபாய் ஒரு இலட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் 147 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் வகுப்பைச் சார்ந்த 332 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் உதவித்தொகைக்கான ஆணைகளையும், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 5 நபர்களுக்கு நல வாரிய அட்டையும் வழங்கப்பட்டது.கூட்டத்தில் டிஆர்ஓ பூங்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மலைமகள், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.