ராமேஸ்வரம்: வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்து அடுத்த தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியான ராமேஸ்வரம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கடல் சிற்றதுதான் காணப்படுகிறது. ராமேஸ்வரம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் மணிக்கு 40கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி பகுதியில் கடல் சிற்றதுடன் காணப்படுகிறது. இதில் தனுஷ்கோடி பகுதியில் உள்ள கிராமத்தில் 200 க்கு மேற்பட்ட நாட்டுப்படகு மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை கடல் நீர்மட்டம் மற்றும் மழை நீர் ஆகியவற்றால் முற்றிலும் மூழ்கி இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து வரக்கூடிய மக்கள் வெளியே செல்ல முடியாமலும், உள்ளே போகமுடியாமாலும் தவித்து வருகின்றனர்
மேலும் கடற்கரை ஓரத்தில் மீனவ கிராம இருப்பதினால் கடல் நீர் ஊர்க்குள்ள புகுந்து இருக்கிறது. இது குறித்து அந்த பகுதி மக்களிடம் கேட்டபோது, இது போன்ற புயல் காலங்களில் கடல் சிற்றம் இயல்பான ஒன்று தான் ஆனால் இன்னைக்கு வழக்கத்தை விட காற்று வேகம் அதிகமா உள்ளது. அதேபோல் கடல் சிற்றம் அதிகமா இருக்கு. இதன் காரணமாக இந்த பகுதியில் இருக்கமுடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

