கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கு; ரயில்வே போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு!
ஜோலார்பேட்டை அருகே கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில், 5 மாதங்களில் வழக்கை நடத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த ரயில்வே போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சம்பவத்தில் ஹேமராஜ் என்ற குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடந்த 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.