உத்தரகாண்ட்: உத்தரகாண்டின் தேவ்பிரயாக் - ஜனாசு இடையே நாட்டின் மிக நீளமான ரயில்வே சுரங்கப்பாதை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே துளையிட்டு முடிக்கப்பட்டது. உத்தரகாண்டின் ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவ்பிரயாக் - ஜனாசு இடையே, 14.57 கிலோமீட்டர் நிலத்திற்கு இமயமலையை குடைந்து ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. தேவ்பிரயாக் - ஜனாசு இடையே நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, பிரபல கட்டுமான நிறுவனமான, லார்சன் & டூப்ரோ மேற்கொண்டது.
இந்த புதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பிறகு உத்தராகண்டின் மலை மாவட்டங்களுக்குச் செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும் என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், ஆன்மிகத் தலங்கள், சுற்றுலா, உள்ளூர் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த சுரங்க ரயில்பாதை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிறுவனத்தின் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திர ஆபரேட்டர்கள் நாள்தோறும் 12 மணி நேரம் பணியாற்றியதால், திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே 14.57 கி.மீ. நீளம்கொண்ட ரயில்வே சுரங்கப்பாதை துளையிட்டு முடிக்கப்பட்டது.