திருமலை; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 66,312 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,728 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.81 கோடி காணிக்கை செலுத்தினர்.
இந்நிலையில் இன்று பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது.
இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி சிலா தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், அன்னபிரசாதம் போன்றவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.