தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக கப்பல் கட்டும் தளம் அமையும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக கப்பல் கட்டும் தளம் அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் அமையும் இரு கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிக வரலாற்றை சங்கப்பாடல்கள் சொல்லும் என முதல்வர் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.