பெங்களூரு: முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமரும் மஜத தலைவருமான எச்.டி.தேவகவுடாவுக்கு வயது 92. அதனால் வயது முதிர்வால் அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுவரும் நிலையில், காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
+
Advertisement