புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1999ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி பவன்குமார் சர்மா துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.மபி மாநில பிரிவை ஐஏஸ் அதிகாரியான சர்மா மூத்த ஐஏஎஸ் அதிகாரியாவார். மேற்கு வங்கத்தை சேர்ந்த 2008ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி லலிதாலட்சுமி துணை ஜனாதிபதி செயலகத்தில் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தபால் துறை அதிகாரியான அமன் சர்மா,பார்மாசூட்டிக்கல் துறை இணை செயலாளராகவும்,மபி கேடர் ஐஏஎஸ் அதிகாரி தருண் குமார் பிதோடே, சுற்றுசூழல் மற்றும் வன துறை இணை செயலாளராகவும், அரவிந்த் காரே உள்துறை இணை செயலாளராகவும், அமித் சிங்க்லா பொருளாதார விவகாரங்களுக்கான இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.