1954 இல் சிவராவ் குழு அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தொழில் ஆராய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை நிலவரத் தகவல் ஆகிய பணிகள் வேலைவாய்ப்புத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இந்த இணையதளம் கனவு காண்…கண்டுபிடி… தீர்வு காண் என்ற வாசகங்களோடு திறக்கும் ஹோம் பேஜில் 6 பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் வேலை நாடுநர், வேலை அளிப்பவர், வேலை நிலவரத்தகவல், தொழில்நெறி வழிகாட்டல், தொடர்பாக, உள்நுழை என்று கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இணையதளத்தில் இணைப்பதிவாக தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் (www.tnprivatejobs.tn.gov.in), வெளிநாட்டில் வேலை பெற உதவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (omcmanpower.com, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (www.tnskill.tn.gov.in/), போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கான மெய்நிகர் கற்றல் இணையதளம் (tamilnaducareerservices.tn.gov.in ), தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இளைஞர்களின் திறனை மேம்படுத்தல் (omcmanpower.com ) ஆகியவற்றின் இணையதள லிங்க்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.