ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி ஓடென்ஸில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது சுற்று போட்டியில் டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்சனுடன், இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் மோதினார். இதில், 21-13, 21-14 என்ற செட் கணக்கில் சென் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியும், தைவான் நாட்டை சேர்ந்த பி.எச். யாங், ஜே.எச். லீ ஜோடியும் மோதின. இதில் சாத்விக், சிராக் ஜோடி 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய ஜோடியான மோஹித் ஜக்லான் மற்றும் லக்ஷிதா ஜக்லான்,தொடக்க சுற்றில் இந்தோனேசியாவின் அட்னான் மௌலானா மற்றும் இந்தா கஹ்யா சாரி ஜமில் ஜோடியிடம் 14-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.