சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. தடுப்பு மருந்துகளை தெளித்து விழிப்புடன் உடனடியாக செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் குறித்த தகவல்களையும் சேகரித்தும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழகத்தில் 8 கல்குவாரிகள் திறக்கும் முடிவைதமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
+
Advertisement 
 
  
  
  
   
