சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் காய்ச்சல் பாதித்த 12,264 பேரில் 3,665 பேருக்கும், திருவள்ளூரில் 9,367 பேரில் 1,171 பேருக்கும், கோயம்புத்தூரில் 7,998 பேரில் 1,278 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement